புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தகவல்

Kanimoli
3 years ago
புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தகவல்

புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னர் புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கும் பட்டியல் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் சில மாதங்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்தது.

பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என வதந்திகள் பரவினாலும் அதுவும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை தற்போது பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்டதுடன், அரசியலமைப்பின் படி மேலும் பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க அதிபருக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.

அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன, தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான உறுப்பினர் மற்றும் ஏ.எல்.எம்.ஏ.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

மேலும், எஞ்சியவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4