வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கைக்கு வந்துள்ள சிலர் இரவு பொருளாதாரம் மூலம் நாட்டைஅழிக்க நினைக்கின்றனர்! மல்கம் ரஞ்சித்

Mayoorikka
3 years ago
 வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கைக்கு வந்துள்ள சிலர் இரவு பொருளாதாரம் மூலம் நாட்டைஅழிக்க நினைக்கின்றனர்! மல்கம் ரஞ்சித்

நமது கலாச்சாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகள் அழித்துவிடும் என  கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரவு பொருளாதாரம் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு தலைமை தாங்குமாறு மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களையும்  அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கைக்கு வந்துள்ள சிலர் இரவு பொருளாதாரம் மற்றும் கஞ்சா வளர்ப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர். இவர்களே இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது பற்றி பேசுகின்றனர்.

பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான நமது கலாச்சாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகள் அழித்துவிடும்.

எனவே, மதத் தலைவர்கள், குறிப்பாக பௌத்த பிக்குகள் நமது செழுமையான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4