மனைவியின் ஆடைகள் தொடர்பில் வெடித்த முரண்பாடு

Kanimoli
3 years ago
மனைவியின் ஆடைகள்  தொடர்பில் வெடித்த முரண்பாடு

யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் அண்மையில் திருணமான நிலையில் , தற்போது அவர்களின் திருமணம் விவாகரத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா யுவதி கடந்த சில வருடங்களாக டிக்டொக்கில் காணொளிகள் பதிவிட்டு வந்துள்ளார். காணொளிகள் பதிவிடும் யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் டிக்டொக் மூலம் அந்த பெண்ணுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்
இந்நிலையில் இவர்களுக்கு கடந்தவாரம் திருமணம் நடந்தது. ஒரே சமயத்தை சேர்ந்த ஜோடியின் திருமணம், அண்மையில்  நடந்துள்ளது.

இந்த நிலையில் மனைவி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தனது அழைப்புக்களிற்கு பதிலளிப்பதில்லையென்றும் அவரை மீண்டும் இணைத்து வைக்க வேண்டுமென்றும் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர் கனடா பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது கணவனின் சித்திரவதைகளை அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் நடைபெற்ற அன்று மாலை மனைவியின் முதுகுப்பகுதி தெரியும் விதமாக ஆடை அணிந்துள்ளதால் தன் நண்பர்கள் கேலி செய்வதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆடை தொடர்பில் இருவருக்கும் இடையே தினமும் முரண்பாடு ஏற்பட திருமணமான 3 ஆவது நாளிலே கணவன் மனைவியை தாக்கி உள்ளார்.

அத்தோடு கணவனின் விருப்பப்படி ஆடையை அணிய முடியாது என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரும் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில்  மனைவி வீட்டிலிருந்து புறப்பட்டு கனடா செல்வதற்காக கொழும்பில் தரித்து நின்ற தனது பெற்றோரிடம் சென்றதுடன்  கணவனிடமிருந்து விவாகரத்துப்பெற  நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த  தகவல்கள் கூறுகின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4