அனர்த்தங்களினால் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு!

Mayoorikka
3 years ago
அனர்த்தங்களினால்  உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு!

காலநிலை அனர்த்தங்களினால்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ​வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 802 மாடுகளும் 34 எருமை மாடுகளும் 256 ஆடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4