எமது வீட்டு வைத்தியர் இஞ்சியாகையால் வீட்டுத்தோட்டத்தில் நடுவோம்.

#Health #herbs #Benefits
எமது வீட்டு வைத்தியர் இஞ்சியாகையால் வீட்டுத்தோட்டத்தில் நடுவோம்.

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. 

இஞ்சிசாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும். இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி குணமாகும். சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட்டால் பித்த, கப நோய்கள் ஏற்படாது. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறுகள் நீங்கும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய்நாற்றம குறையும்

துவையலாக்கி சாப்பிட வயிற்று இரைச்சல் குணமாகுவதோடு, காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் குணமாகும்;.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகோப்பை வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி குணமாகும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர நோய் தடுப்பு திறன் அதிகரிக்கும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறைவடையும்.

 மேலும் இது குடலில் சேரும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

 இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால்  ஆரோக்கியமாக வாழலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!