அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.12.2022

மேஷம்
அசுவினி : முயற்சியை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரணி : நேற்று தள்ளிப்போன செயல் இன்று நிறைவேறும். நினைத்ததை நடத்திக் காட்டுவீர்கள்.
கார்த்திகை 1: உங்கள் செயல்களில் குறை கூறியவர் மனமாற்றம் அடைவர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப சூழ்நிலை சாதகமாகும். நேற்றைய செயல் நிறைவேறும்.
ரோகிணி : திட்டமிட்டு செயல்படுவதால் இன்று வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2 : வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். கடன்களை அடைப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அந்நியரின் உதவியால் உங்கள் முயற்சி பலிதமாகும்.
திருவாதிரை : வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி நன்மை தரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உங்களால் குடும்பத்தினர் பெருமை அடைவார்கள்.
ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்

சிம்மம்
மகம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோரின் ஆசியால் நல்லது நடக்கும்.
பூரம் : உங்கள் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் வந்து நீங்கும்.
உத்தரம் 1 : செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். புதிய முயற்சி தாமதமாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : திடீர் செலவு ஏற்படும். புதிய இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம் : குடும்பத்தினர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்கள்.
சித்திரை 1, 2 : நேற்று இழுபறியாக இருந்த வழக்கு ஒன்று சாதகமாகும். நட்பு வட்டம் விரியும்.

துலாம்
சித்திரை 3, 4 : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
சுவாதி : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.
விசாகம் 1, 2, 3 : பொருளாதார நெருக்கடி விலகும். நண்பர்களால் உங்களுக்கு மேன்மை உண்டாகும்.

விருச்சிகம்
விசாகம் 4 : குடும்பத்தினருடன் தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள்.
அனுஷம் : போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படுமாறு மாற்றத்தை சந்திப்பீர்கள்.

தனுசு
மூலம் : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். மனம் மகிழும்படியான நிலை ஏற்படும்.
பூராடம் : அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும்.
உத்திராடம் 1: புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
திருவோணம் : வியாபாரத்தில் புதிய முயற்சி வேண்டாம். பண வரவில் தடைகள் ஏற்படும்.
அவிட்டம் 1, 2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிரிகளால் சில சங்கடம் உண்டாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும் மனம் மகிழும்படியான நிலை உண்டாகும்.
சதயம் : புதிய நட்பினால் உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும்.

மீனம்
பூரட்டாதி 4 : உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகிச் செல்வார்கள்.நிதிநிலை சரியாகும்.
உத்திரட்டாதி : உங்கள் பொதுச்செயலுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
ரேவதி : உறவினருடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.