மெஸ்ஸி கூட ஃபோட்டோ.. இன்னைக்கி அவரு கூடயே உலக கோப்பையில் கோல்.. திரும்பி பாக்க வெச்ச இளம் வீரர்
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
சென்னை மாரத்தானின் 11-வது பதிப்பு 2023-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்ஃபெக்ட் மைலர் (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சமாகும். முதன் முறையாக பார்வைக் குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 பிளேடு ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 50 சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர். சென்னை மாரத்தானில் கலந்து கொள்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 15 (நாளை) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க நுழைவு கட்டணம் ரூ.1,250 ஆகும். மற்ற 3 பிரிவுகளுக்கான கட்டணம் ரூ.1,475 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். 4 பிரிவு பந்தயமும் ஜனவரி 8-ம் தேதி காலையில் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கும். இதில் 10 கிலோ மீட்டர் ஓட்டம் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடையும். மற்ற 3 பந்தயங்களும் உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடையும். சென்னை மாரத்தான் போட்டியையொட்டி ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான கண்காட்சி நடைபெற உள்ளது.