கர்த்தார் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர் அறிவிக்கப்பட்டுள்ளது
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையிலான கர்த்தார் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று (18) லுசைல் மைதானத்தில் (lusail) அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையே நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் நடுவராக போலந்தின் சைமன் மார்சினியாக் (Szymon Marciniak) அறிவிக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவருக்கு விரிவான UEFA சாம்பியன்ஸ் லீக் அனுபவம் உள்ளது.
இதன்மூலம், FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது நாட்டிலிருந்து பொறுப்பேற்ற முதல் நடுவர் என்ற வரலாற்றை போலந்து நடுவர் சைமன் மார்சினியாக் வரலாறு படைத்தார்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இறுதிப்போட்டிக்கு சகநாட்டவர்களான பாவெல் சோகோல்னிக்கி மற்றும் டோமாஸ் லிஸ்ட்கிவிச் ஆகியோர் சைமனுக்கு உதவுவார்கள்.
இதற்கிடையில், கத்தாரின் அப்துல்ரஹ்மான் அல் ஜாசிம் சனிக்கிழமையன்று கலீஃபா சர்வதேச மைதானத்தில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இடத்திற்கான பிளே-ஆஃப் ஆட்டத்திற்கு நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.