வாழைப்பழம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?

#Health #Fruits
வாழைப்பழம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
  • வாழைப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதென்றாலும் காலையில் இதனை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.
     
  • வாழைப்பழத்தில் அமிலமிருப்பதனலாம் அது குடலை பாதிக்கும். அதே வேளை அமிலமும் சர்க்கரையும் உடலில் அசௌகரியத்தை உண்டாக்கும். அதனால் காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம்.
     
  • வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உண்டு. இதனை வேறு பழங்களுடன் சாப்பிட்டால் மேலும் சிறப்பானது காரணம் அதில் உள்ள அமிலத்தின் செறிவு கலந்து சாப்பிடும் போது குறையும்.
     
  • வாழைப்பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிட்டா் அதனில் இருக்கும் மக்னீசியம் இரத்தத்தில் கலந்து, இரத்தத்தில் இக்கனியப்பொருள் கூடிவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும்.
     
  • மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.
     
  • பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். சாதாரணமாக இரவில் வாழைப்பழம் சாப்பாட்டிற்கு பின் உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4