உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி 3ம் இடம் பிடித்த குரோஷியா

Prasu
3 years ago
உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி 3ம் இடம் பிடித்த குரோஷியா

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 

முன்னதாக இன்று இரவு கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்கிய 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலே குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ வார்டியோல் தனது அணிக்கான முதல் கோலை அடித்து மாஸ் காட்டினார். இதற்கு பதிலடியாக மொரோக்கோ அணி வீரர் அஷ்ரப் டேரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதன்முலம் ஆட்டத்தில் முதல் பாதியில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். 

பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டும் கோல் எதுவும் அடிக்காததால் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4