அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 18.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 18.12.2022

மேஷம்
அசுவினி : நீங்கள் நினைத்ததை நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பரணி : வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1 : நண்பர்கள் உதவியால் பணி இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை உயரும்.
ரோகிணி : குடும்பத்தினர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : திட்ட மிட்ட செயல் இன்று நிறைவேறும்.பொதுஇடத்தில் மதிப்பு கூடும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். அதன் முயற்சியும் பலிக்கும்.
திருவாதிரை : உங்களுக்கு முன்னோரின் ஆசி இன்று உண்டு. தடைபட்ட செயலை நிறைவேற்றுவீர்.
புனர்பூசம் 1, 2, 3 : பணியிடத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : துணிச்சலுடன் செயல்பட்டுவீர்கள். அதனால் நன்மை ஏற்படும்.
பூசம் : பொதுச் செயலில் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
ஆயில்யம் : சகோதரரால் நன்மை உண்டாகும். மாலை கோயிலுக்கு செல்வீர்கள்.

சிம்மம்
மகம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூரம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்கள். கூடுதல் வருமானத்திற்கு முயற்சிப்பீர்கள்.
உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் முயற்சி பலிக்கும். வாடிக்கையாளர்களால் லாபம் உண்டாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
அஸ்தம் : உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். நீங்கள் ஈடுபடும் செயலில் முன்னேற்றம் காணும் நாள்.
சித்திரை 1, 2 : வர வேண்டிய பணம் வந்து சேரும். தொழிலை விரிவு செய்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: வெளியூர் பயணத்தால் அலைச்சல் ஏற்படும். முயற்சி தாமதமாகும்.
சுவாதி: விரும்பிய செயல்களில் தடை ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் வகையில் திடீர் செலவு தோன்றும். போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : புதிய முயற்சி இன்று வேண்டாம்.மாலையில் மவுனத்தால் நிம்மதி உண்டு.
அனுஷம் : வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள்.
கேட்டை : வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு
மூலம் : தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும் நாள். முயற்சி பலிக்கும்.
பூராடம் : கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வருமானம் தடையின்றி வரும்.
உத்திராடம் 1 : வேலை பார்க்கும் இடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : நேற்று இழுபறியாக இருந்து வந்த செயல் இன்று நிறைவேறும்.
திருவோணம் : எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது உங்களுக்கு நன்மை தரும்.
அவிட்டம் 1, 2 : நிதிநிலை சீராகும். தந்தை வழி உறவினர் ஒருவர் உங்கள் செயலுக்கு உதவியாக இருப்பார்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயலில் கவனம் தேவை.
சதயம் : வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : அடுத்தவருக்கு அறிவுரை கூறுதல், யாருக்கும் ஜாமீன் வழங்குதல் இன்று வேண்டாம்.

மீனம்
பூரட்டாதி 4 : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள்.
உத்திரட்டாதி : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.
ரேவதி : கவனத்துடன் செயல்பட்டுவீர்கள். உங்கள் செயலால் குடும்பம் மகிழ்ச்சி அடையும்