வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உதவிக்காக மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகம்!

Mayoorikka
3 years ago
வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உதவிக்காக மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகம்!

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் வாழும் 03 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் வகையில் இந்த புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4