2022 உலக கால்பந்து போட்டியில் ஃபிஃபாவிற்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

Mayoorikka
1 year ago
2022 உலக கால்பந்து போட்டியில் ஃபிஃபாவிற்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

உலக கால்பந்து போட்டி கடந்த நவம்பர் 20ஆம் திகதி  தொடங்கி டிசம்பர் பதினெட்டாம் திகதி வரை 28 நாட்கள்   கத்தாரில்   போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 

இந்த போட்டிகள் மூலம் ஃபிஃபாவிற்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 62ஆயிரம் கோடி. இதற்கு முந்தை உலக கோப்பை ரஷ்யாவில் நடைபெற்ற போது கிடைத்த வருவாயை விட 8 ஆயிரம் கோடி ரூபாய் அதிக வருமானம் இந்த உலக கோப்பை போட்டியில் கிடைத்துள்ளது.

உலக அளவில் எத்தனையோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் கால்பந்திற்கு என தனி மவுசு இருக்கிறது. உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டிற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து விளையாடும் விளையாட்டு என்பதால் கால்பந்திற்கு உயரிய மரியாதை இருக்கிறது. கால்பந்து வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இல்லை… பக்தர்கள் இருக்கிறார்கள். மாரடோனா முதல் மெஸ்ஸி வரை கால்பந்து வீரர்கள் கொண்டாப்படுகிறார்கள்

சர்வதேச அளவில் கால்பந்து அணிகளை ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்துவதற்காவே உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஃபிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம். ஞாயிற்றுக் கிழமையுடன் முடிந்திருக்கிறது 22ஆவது உலக  கோப்பை கால்பந்து போட்டிகள். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியனாக முடி சூடியிருக்கிறது. நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பை போட்டிகள் பல்வேறு சாதனைக படைத்திருக்கிறது. அதில் முக்கியமான சாதனை வருமானம்.

 இந்த உலக கோப்பை போட்டியின் போது கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என ஃபிஃபா கணக்கு போட்டிருந்தது. ஆனால் அதைவிட இருபதாயிரம் கோடிக்கும் மேல் அதிக வருவாய் கிடைத்துள்ளது. பொதுவாக வெவ்வேறு நகரங்களில் உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் போது, வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் என அனைவரும் பயணம்  செய்வதற்கு பெரும் தொகை செலவாகும், ஆனால் இந்த முறை கத்தாரில் தோஹாவில் அமைக்கப்பட்டிருந்த 8 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற்றதால் பயணச்செலவு மிகவும் குறைந்துள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

போட்டிகளை ஒளிபரப்புதற்கான உரிமை, விருந்தினர்களை உபசரிப்பதற்கான அனுமதி, டிக்கெட் விற்பனை உள்ளிட்ட வகைகள் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது. கிடைத்த வருவாயில் 56 விழுக்காடு வருவாய் ஒளிபரப்பு உரிமம் வழங்குவதில் இருந்து கிடைத்துள்ளது. மற்ற  நாடுகளில் நடைபெற்ற உலக கோப்பைக்கான டிக்கெட் கட்டணத்தை விட கத்தாரில் நடைபெற்ற போட்டிகளுக்கான டிக்கெட் விலை 40 விழுக்காடு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. தங்களுக்கு கிடைத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை கொரோனா பெருந்தொற்று நிவாரணத்திற்காக வழங்க ஃபிஃபா முடிவு செய்துள்ளது.

அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2026 ஆம் ஆண்டு வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!