மாற்றிட மாறிடேன்.- கவிஞர் நதுநசி.
Mayoorikka
2 years ago

நாளும் நீ பேசும்
கதை கேட்டு நானும்
நம்பியொரு உலகில்
வாழ்ந்து போனேன்.
எட்டி வெளியே நான்
வந்து பார்த்த போது
என்னை ஏமாற்றிய
உன்னைக் கண்டேன்.
அந்த நொடியில் நான்
இறந்து போனேன்.
இன்று உன் முன்னே
நடைப் பிணமானேன்.
பிஞ்சு வயதில் எனை
தாங்கிட மறந்தவர் அவர்.
நெஞ்சு வயதில் கூட நீ
சேர்ந்திட மறுத்தாயோ?
உன்னை தினம் நான்
எனைத் தாங்கும் என்
இறையாக கண்டேன்.
அத்தனையும் பொய்யாக.
இசையும் மனதையும்
மாற்றிட முயலும்
சமூகத்தில் வாழ்கிறேன்.
எதனையும் நம்பிடாது.
........ அன்புடன் நதுநசி.



