டயானா கமகேவுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு

Prathees
3 years ago
டயானா கமகேவுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இன்று கையளித்துள்ளார்.

அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என ஓஷால ஹேரத் கூறுகிறார்.

எனவே, அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முறைப்பாட்டாளர் ஓஷல ஹேரத், இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4