தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோலின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அரண்மனை

Prasu
3 years ago
தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோலின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அரண்மனை

தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியின் ஒரே வாரிசான இளவரிசி

பஜ்ராகிதியாபா மஹிடோல் (44) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பாங்காக்கின் வடக்கே உள்ள நகோன் ராட்சசிமாவில் ராணுவ நாய் பயிற்சியின் போது இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் திடீரென மயங்கி விழுந்தார். 

இதனையடுத்து அவர் உடனடியாக பாங்காக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில்,இளவரிசியின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை அவரது இதயம் துடிக்கும் செயல் முறையின் ஒரு பகுதி சரியாக செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தொடர்ந்து அவரது இதயத் துடிப்பை கண்காணிக்கவும் அவரது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மருத்துவக் குழுவுக்கு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனையின் முறையான வாரிசு யார் என்பதை தாய்லாந்து அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்ற சூழலில், இளவரசியின் உடல்நலக்குறைவு அரசளவில் ஏதேனும் பாதிப்பையோ மாற்றங்களையோ எற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4