அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.12.2022

மேஷம்
அசுவினி : இரண்டு நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
கார்த்திகை 1: புதிய நண்பரிடம் உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை உங்கள் விருப்பப்படி இன்று முடிவிற்கு வரும்.
ரோகிணி : குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். மகிழ்ச்சியான நாள்
மிருகசீரிடம் 1, 2 : பழைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.
திருவாதிரை : பணியாளர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்
புனர்பூசம் 1, 2, 3 : முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். ராகுவின் அருளால் எண்ணம் நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்கள் செயல்களில் சில தடை ஏற்படும். சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்.
பூசம் : குருவின் அருளால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஒரு செயலில் போராடி வெல்வீர்கள்.
ஆயில்யம் : வியாபாரத்தில் போட்டியை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும்

சிம்மம்
மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரம் : மற்றவரின் விமர்சனங்களை ஒதுக்கி வைப்பீர்கள். நேற்று நினைத்ததை இன்று செயல்படுத்துவீர்கள்.
உத்திரம் 1 : மற்றவரால் செய்ய முடியாத செயலை செய்து சாதனை செய்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : திருமணத்திற்கு வரன் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
அஸ்தம் : வங்கியில் கேட்டிருந்த லோன் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும்.
சித்திரை 1, 2 : வருமானத்தில் இருந்த தடை விலகும். வியாபாரத்தை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்
சித்திரை 3, 4: இரண்டு நாளாக இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.
சுவாதி: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர் மூலம் பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : வரவுகள் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும்.
அனுஷம் : உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலை ஏற்படும்.
கேட்டை : வாகன வகையில் செலவு உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று இழுபறியாகும்.

தனுசு
மூலம் : எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும்.
பூராடம்: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை உங்கள் முயற்சியால் சரி செய்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.
திருவோணம்: உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவார்கள். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும்.
அவிட்டம் 1, 2: வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். வருமானம் உயரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
சதயம் : செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : வரவேண்டிய பணம் இன்று மொத்தமாக வந்து சேரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி உண்டாகும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் இருந்த சங்கடம் விலகும். எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும்
ரேவதி: நீண்ட நாளாக திட்டமிட்டிருந்த வேலையை இன்று முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.