இந்திய முகாமில் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக்குழு தலைவர்கள் 9 பேர் கைது

Prathees
1 year ago
இந்திய முகாமில்  இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக்குழு தலைவர்கள் 9 பேர் கைது

நாட்டின் உயர்மட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்களான கிம்புல எலே குணா, புகுடுகண்ண, பம்மா, வல்லே சுரங்க, கோட்டா காமினி மற்றும் 09 பாதாள உலகப் பலம் வாய்ந்தவர்கள், இந்தியாவில் உள்ள வெளி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பினரால் நேற்று முன்தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த போதே இந்த பாதாள உலகப் பலமானவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம்புலா எலே குணா உள்ளிட்ட பாதாள உலகத் தலைவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு பாரிய போதைப்பொருள் விநியோகம் செய்ததாகவும், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சில காலங்களுக்கு முன்னர், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த பாதாள உலக தலைவர்கள், பின்னர் அந்நாட்டில் உள்ள திறந்தவெளி புனர்வாழ்வு முகாமில் விசேட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புகளை பேணி இந்தியாவில் தொடர் தாக்குதல்களை நடத்த இந்த பாதாள உலகக் குழு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஒன்பது பாதாள உலக குற்றவாளிகள் இந்திய புலனாய்வு அமைப்பின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை சதுக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட எல். டி. டி. இ. தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கிம்புலா எலே குணாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலுக்கு மேலதிகமாக, கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு இந்த பாதாள உலக தலைவன் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குணா மற்றும் ஏனைய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு செல்வதுடன், இந்த நாட்டில் உள்ள பாதாள உலகக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி இந்த முகாமில் தேசிய புலனாய்வு முகமையினர் மேற்கொண்ட சோதனையின் போது, ​​இந்த பாதாள உலக பலத்தவர்களிடம் இருந்து கைத்தொலைபேசி சிம் அட்டைகள் மற்றும் பல பொருட்களை கைப்பற்றியிருந்தனர்.

இது தொடர்பாக நீண்ட விசாரணைக்கு பின், திறந்தவெளி முகாமில் இருந்த இந்த பாதாள உலக உறுப்பினர்களை கைது செய்ய இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு  நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!