2022 LPL அரையிறுதி போட்டிகளை இலவசமாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி

Prasu
3 years ago
2022 LPL அரையிறுதி போட்டிகளை இலவசமாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

LPL தொடரின் 11 நாட்கள் நடைபெற்ற 20 போட்டிகளின் பின்னர் kandy Falcons, Jaffna Kings, Galle Gladiators மற்றும் Colombo Stars அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

போட்டியின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது ஆட்டம் Jaffna Kings மற்றும் kandy Falcons அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி இன்று (21) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி டிசம்பர் 22ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.

போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி Colombo Stars மற்றும் Galle Gladiators அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தின் C மற்றும் D பகுதிகளில் அரையிறுதி போட்டிகளை கண்டுகளிக்க இன்று முதல் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4