ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்திய மத்திய அரசு

Prasu
3 years ago
ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்திய மத்திய அரசு

சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீரென்று வேகமாக பரவி வருகிறது. 

இதையடுத்து மாநிலங்களை உஷார்படுத்தி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், "கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். 

புதிதாக தோன்றுகிற கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும். கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கிவிட வேண்டும். 

உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: சீனாவில் தொற்று அதிகரித்தாலும் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஆதார் பூனாவாலா இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மத்திய அரசு திடீர் நிபந்தனை விதித்துள்ளது. 

ராகுல்காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையில் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள். 

இதனால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்று கருதி மத்திய அரசு ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4