அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 22.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 22.12.2022

மேஷம்
அசுவினி: உங்கள் முயற்சி இழுபறியாகும். செயலில் கவனம் தேவை. வாக்குவாதம் தவிர்க்கவும்.
பரணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
கார்த்திகை 1: எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். சட்டரீதியான சங்கடத்தை சிலர் சந்திப்பர்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். நல்ல நாள்.
ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.
மிருகசீரிடம் 1, 2: உறவினருடன் கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உடல்நிலை சீராகும். உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
திருவாதிரை: எதிரி தொல்லைக்கு சட்ட ரீதியாக முடிவு கட்டுவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்ப்பு நிறைவேறும். சேமிப்பு கூடும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வீர்கள். லாபம் உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.
பூசம்: பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். நிதிநிலை உயரும்.
ஆயில்யம்: வசித்து வரும் இடத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள். நட்புகளால் ஆதாயம் உண்டு.

சிம்மம்
மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
பூரம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் 1: வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வருவாய் உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: விடாமுயற்சியால் ஆதாயம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.
அஸ்தம்: பணியிஇடத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
சித்திரை 1, 2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். நல்ல நாள்.
சுவாதி: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3: தொழிலை விரிவு செய்வீர்கள். ஆதாயம் உயரும். பொன், பொருள் சேரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
அனுஷம்: தொழில் ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். பணத்தில் கவனம் தேவை.
கேட்டை: பொன் பொருளைக் கையாள்வதில் கவனம் தேவை. வீண்சிந்தனைக்கு இடம் தராதீர்கள்.

தனுசு
மூலம்: வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். திடீர் செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
பூராடம்: திடீர் பயணம் ஏற்படும். பணியாளர்கள் உங்கள் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவர்.
உத்திராடம் 1: திடீர் செலவு ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: திட்டமிட்ட செயல் நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும். சங்கடம் தீரும்.
திருவோணம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2: தொழிலில் புதிய பங்குதாரர் சேருவர். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: தொழிலில் மந்தநிலை மாறும். உங்கள் அணுகுமுறையால் வருமானம் காண்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்த்த செய்தி தேடிவரும்.கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
ரேவதி: வழிபாட்டில் மனம் செல்லும். குடும்ப பிரச்சினைகள் தீரும். பெரியோர் ஆதரவளிப்பர்.