அழுக்குத்துணிகளை சுடுநீர் கொண்டு துவைக்கலாமா?

#Health #water
அழுக்குத்துணிகளை சுடுநீர் கொண்டு துவைக்கலாமா?

தற்போதெல்லாம் வீட்டிற்கு வீடு சலவை இயந்திரம் வந்துவிட்டதால் யார் கையால் அழுக்குத் துணிகளை தோய்ப்பது. ஆனால் உண்மையில் இயந்திரத்தை காட்டிலும் நாம் கையால் சில நிமிடங்கள் தோய்ப்பது நமக்கு உடல் ஆரோக்கியத்தையும், மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும் வேளையில் துணியும் நன்கு துவைக்கப்பட்டு விடும்.

துணியில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால் சிலர் சுடு நீர் பயன்படுத்தி சோப்பு போட்டு அலசுவதுண்டு. அப்படி அடிக்கடி சுடு நீர் கொண்டு துணிகளை அலசுவது துணியின் தரத்தை பாழ்படுத்தி விடும். அப்படி சுடுநீர் பயன்படுத்தி துவைக்கும்போது கறை நீங்கி பளிச்சென்று காட்சி அளிக்கும்.

சுடுநீர் பயன் படுத்துவதால் ஆடை சுருங்கிவிடக்கூடும்.  மேலும் சுடு நீர் ஆடையின் நிறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சுடுநீரில் இருக்கும் வெப்பம் காரணமாக சாயம் மங்கி ஆடை நிறம் மாற்றமடையக்கூடும். மேலும், அதில் உள்ள நூல் இழைகள் வலுவிழந்துபோய்விடும்.

ரெடிமேடு ஆடைகளை வாங்குவதாக இருந்தால் அதில் எப்படி துவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம். மற்ற துணிகளாக இருந்தால் சுடுநீர் உபயோகிக்கலாமா? என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
ஒருவேளை சுடு நீர் பயன்படுத்துவதாக இருந்தால் ஆடையின் ஒரு பகுதியை அதில் 5 நிமிடங்கள் முக்கி பரிசோதிக்கலாம்.

அப்போது ஆடையில் சுருக்கமோ, நிறம் மாறுதலோ தென்பட்டால் சுடுநீர் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும். சுடு நீரில் துவைக்கும் தன்மை கொண்ட துணியாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்கு மேல் சுடு நீரில் ஊறவைக்கக்கூடாது.

ஏனெனில் எந்த துணியாக இருந்தாலும் சுடுநீரில் அதிக நேரம் ஊறவைத்தால் சுருங்கிவிட தொடங்கிவிடும். சுடு நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரை உபயோகிக்கலாம். அது துணியின் ஆயுளை பாதுகாக்கும். ஆடைகளில் படியும் கறைகளை போக்குவதற்கு சுடு நீருக்கு மாற்றாக வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை துவைப்பதற்கு சுடு நீர் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகளை கொல்வதற்கு சுடு நீர் உதவும். பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை சுடு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் நல்லது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4