2023 பிறக்க இன்னும் சில நாட்களே... பிறந்தால் உலகில் என்ன நடக்கும்.... ஒரு ஆருடம்....!

#Astrology #Holy sprit
2023 பிறக்க இன்னும் சில நாட்களே... பிறந்தால் உலகில் என்ன நடக்கும்.... ஒரு ஆருடம்....!

இன்னும் சில நாட்களில் 2022 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. அனைவரும் 2023 எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கப்போகிறோம். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த பாபா வாங்க என்பவர் கணித்த எதிர்காலத்தை அவருடைய சீடர்கள் ஆருடங்ககளாக முன்மொழிந்து உள்ளனர்.

அவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

சூரிய சுனாமி

இந்த ஆண்டில் அதாவது 2023ல் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி தாக்கக் கூடும். இதனால் பூமியின் காந்த புலம் வலுவிழக்கும்.

பெரிய நாடுகள் உயிரியல் - ஆயுத தாக்குதல் நடத்தும்

2023ல் பெரிய உலக நாடுகள் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிய நாடுகளைத் தாக்கும்.

ஏலியன்கள் நம்மை தாக்கும்

ஏலியன்கள் பற்றிய புதிர்கள் பல ஆண்டுகளாக நம்மை சூழ்ந்திருக்கின்றன. ஏலியன்களுக்கு ஏற்கெனவே மனிதர்களைத் தெரிந்திருக்குமா? அவை நம்மிடம் எப்படி நடந்துகொள்ளும் என எதுவும் இப்போது நமக்குத் தெரியாது.

ஆனால் 2023ல் ஏலியன்கள் நம்மைத் தாக்கும் என்றும் அதனால் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள் என்று ஆருடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் அணு வெடிப்பு

ஆசியாவில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் அணு வெடிப்பு ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இன்று பல அணு மின் நிலையங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவற்றில் ஏதோ ஒன்று விபத்துக்கு உள்ளானால் அது பெரும் தீங்கு விளைக்கும்.
இந்த ஆருடம் ஒரு வேலை உக்ரைன் - ரஷ்யா போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து இருக்கலாம்.

ஆய்வக மனிதர்கள்

2023ம் ஆண்டு ஆய்வகங்களில் மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்களின் நிறம், உயரம் உட்பட அனைத்துமே முடிவு செய்யப்பட்டு தயாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறு பாபா வாங்க வின் சீடர் தெரிவித்துள்ள ஆருடம் நடந்தால் நம் நிலை என்னவாகும். சற்று யோசித்தால் மயிர்க்கூச்சரிக்கிறது அல்லவா? ஆயினும் நாம் இறைவனை பிரார்த்தித்து இவ்வாறெல்லாம் நடக்கக்கூடாது என்று வேண்டி, 2023ல் உலகில் பசி பட்டினி நீங்கி சுபிட்சமான எதிர்காலம் கிடைக்க எதிர்பார்ப்போம்.