அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.12.2022

மேஷம்
அசுவினி: உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். நேற்றுவரை இருந்த சங்கடங்கள் விலகும்.
பரணி: சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சிந்தித்து செயல்படுவீர்கள் உங்கள் முயற்சி ஒன்று வெற்றியாகும்.
கார்த்திகை 1: உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் இன்று உங்களைத் தேடிவந்து உதவி செய்வார்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் உங்கள் மன நிலையில் பதட்டம் ஏற்படும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரோகிணி: எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். செயல்களில் பின்னடைவு உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
மிருகசீரிடம் 1, 2: உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். பயணத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நண்பர்கள் உதவியுடன் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சல சலப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம்
புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.
பூசம்: பழைய பிரச்சினை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள்.
ஆயில்யம்: செயல்களில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சி ஒன்று அனுகூலமாகும்.

சிம்மம்
மகம்: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் பகைவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். உங்கள் மதிப்பு உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
அஸ்தம்: ஆலய தரிசனம் மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். கடன்கள் அடைபடும். நிதிநிலை உயரும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபமடைவீர்கள்.
சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை குடும்பத்தினர் ஆதரவுடன் சரி செய்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள் துணையுடன் தீராத பிரச்சினை ஒன்றில் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வந்து சேரும். நண்பர்களால் ஒரு முயற்சி நிறைவேறும்.
அனுஷம்: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். புதிய முயற்சி ஒன்று நிறைவேறும்.
கேட்டை: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் பாராட்டுவார்கள்.

தனுசு
மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.
பூராடம்: எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை இன்று நிறைவேற்றுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.
திருவோணம்: தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவு வந்து சேரும்.
சதயம்: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த ஒன்றில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும். சேமிப்பில் உங்கள் கவனம் செல்லும்.

மீனம்
பூரட்டாதி 4: சுறு சுறுப்பாக செயல்பட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி: காணாமல் போன ஒரு பொருள் இன்று கிடைக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.
ரேவதி: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபார இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.