காற்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் புகைப்படத்தோடு வெளிவந்திருக்கும் நாணயம் - உண்மையா...?

Nila
1 year ago
காற்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் புகைப்படத்தோடு வெளிவந்திருக்கும் நாணயம் - உண்மையா...?

நடைபெற்ற கட்டார் 2022 உலகக் கோப்பை தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. 36 ஆண்டுகளின் பின்னர் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதால் இதனை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அந்த நாட்டின் நாணயத் தாளில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடுவது குறித்து அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் வணிகப் பத்திரிகையான எல் பைனான்சிரோ இதனை செய்தியாக வெளியிட்டுள்ள போதிலும் இந்த திட்டத்தை மத்திய வங்கி உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வேடிக்கையாக முன்மொழியப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் இது குறித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே உறுப்பினர்கள் பேசி இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சூழலில் மெஸ்ஸி படங்கள் அடங்கிய மாதிரி ரூபாய் நோட்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

கடந்த 1978 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது அதன் நினைவாக அந்த நாட்டில் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டின் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளதாக சொல்லப்படும் நாணயத் தாளில் அணியின் பயிற்சியாளர் படமும் பின்பக்கத்தில் இருக்கும் எனத் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை எனவும் தற்போது சமூக வலைத்தளங்களில் மெஸ்ஸியின் புகைப்படங்கள் அடங்கிய போலி நாணயத்தாள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!