ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயத்தின் அடிப்படையில் மின்சார பயன்பாட்டை வரையறுக்கும் சுவிட்சர்லாந்து

Prasu
1 year ago
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயத்தின் அடிப்படையில் மின்சார பயன்பாட்டை வரையறுக்கும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அரசாங்கம் மின்சாரப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் அடிப்படையில் மின்சாரப் பயன்பாடு சுவிட்சர்லாந்தில் குறைக்கப்பட உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் பயன்படுத்தப்பட்ட சராசரி மின்சாரத்தை விடவும் பத்து வீதம் வரையில் மின்நுகர்வு குறைக்கப்பட உள்ளது. சுவிட்சர்லாந்து அமைச்சரவையினால் இன்றைய தினம் இது பற்றிய அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மின்சாரம் நுகரப்படும் பீக் நேரங்களில் மேலதிகமாக ஐந்து வீத மின்பயன்பாடு குறைக்கப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் சுவிட்சர்லாந்து மின்சாரத்தின் மொத்த விலையை குறைப்பதற்கும், ஐரோப்பாவில் மின்வார விநியோகத்தை வலுப்படுத்தவும் முடியும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார பயன்பாட்டை அல்லது நுகர்வினை குறைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2023-2024ம்ஆண்டு குளிர்காலம் வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.