அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.12.2022

மேஷம்
அசுவினி: தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் ஈடுபடும் முயற்சி வெற்றியாகும்.
பரணி: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். உங்கள் அனுகுமுறையால் நினைத்ததை அடைவீர்கள்.
கார்த்திகை 1: வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்ப்புகளால் உங்கள் செயல் தள்ளிப்போகும்.
ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் விழிப்புணர்வு அவசியம் சட்ட ரீதியான சங்கடங்கள் ஏற்படலாம்.
மிருகசீரிடம் 1, 2: வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்வீர்கள்.
திருவாதிரை: உறவினர்களின் ஆதரவால் நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். எதிர்பாலினரால் ஆதாயம் உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்

கடகம்
புனர்பூசம் 4: மறைமுக சூழ்ச்சிகளை முறியடித்து உங்கள் செயலை செய்து வெற்றி காண்பீர்கள்.
பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.
ஆயில்யம்: உங்கள் துணிச்சல் அதிகரிக்கும். நண்பர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும்.

சிம்மம்
மகம்: பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலை பெரியோரின் ஆதரவுடன் பேசி தீர்ப்பீர்கள்.
பூரம்: உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்.
உத்திரம் 1: அலுவலகத்தில் உங்கள் செயல்களுக்கு பாராட்டு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: தாய்வழி உறவுகளின் ஆதரவால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்.
அஸ்தம்: குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு இறைவனின் அருள் உண்டாகும்.
சித்திரை 1, 2: குல தெய்வ அருளால் உங்கள் நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: எதிர்பாலினரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
சுவாதி: நண்பர்களுடன் கவனமாக பழகுங்கள். மற்றவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகலாம்.
விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்
விசாகம் 4: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
அனுஷம்: பெரியோரின் ஆலோசனை நன்மையாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும்.
கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

தனுசு
மூலம்: உங்கள் மனம் தனிமையை விரும்பும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் குளறுபடி உண்டாகும்.
பூராடம்: மற்றவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். நிதானமுடன் செயல்படுவதால் நன்மைகள் உண்டு.
உத்திராடம் 1: உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வரவை விட செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை.
திருவோணம்: மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: முயற்சிகள் வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.
சதயம்: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்கள் உங்கள் செயலுக்கு உதவியாக இருப்பார்கள்.

மீனம்
பூரட்டாதி 4: உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
உத்திரட்டாதி: தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரேவதி: உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரியால் பாராட்டப் படுவீர்கள்.