பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு பிறந்த அதிசயக் குழந்தை

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு அதிசயக் குழந்தை ஒன்று பிறந்துள்து. அதற்கு ஹைடி (Heidi) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் chemotheraphy எனும் சிகிச்சையைப் பெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஹைடி பிறந்தார்.
அந்தச் சம்பவம் பிரிட்டனில் நடந்தது. ஹைடியின் தந்தையின் பெயர் ஜேம்ஸ் (James). தாயார் பெயர் பெத்தனி (Bethany).ஜேம்ஸுக்குப் புற்றுநோய் வந்த சில மாதங்களுக்குள் அவரது மனைவி பெத்தனிக்குப் புற்றுநோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
அதுவும் அவர் குழந்தையை 21 வாரங்களாகக் கருவில் சுமந்தபோது அந்தச் செய்தி அவருக்குத் தெரிய வந்தது.ஜேம்ஸுக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்ட செய்தியை அறிந்தவுடன் அவர்கள் குழந்தையைப் பெற முயற்சி செய்தனர்.
எனக்குப் புற்றுநோய் உள்ளது எனும் செய்தியைக் கேட்ட தருணத்தை என்னால் மறக்க முடியாது. அது எப்படிச் சாத்தியம் என நான் பலமுறை கேட்டதுண்டு. ஆனால் ஹைடி எந்தவிதமான சிக்கலுமின்றி ஆரோக்கியமாகப் பிறந்தார். மகளின் பிறந்தநாள் எங்கள் மனத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று, என்று பெத்தனி (Bethany) தெரிவித்தார்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் தம்பதிக்குப் பக்கபலமாக இருந்து ஹைடி ஆரோக்கியமாகப் பிறக்கக் காரணமாக இருந்தவர் மருத்துவர் சலிம் ஷஃபிக் (Salim Shafeek) என செய்தி வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதும் குழந்தையைக் கருவில் சுமப்பதும் அரிது. எனது 25 ஆண்டுகால அனுபவத்தில் இதுவே முதல் முறை, என்று மருத்துவர் சலிம் ஷஃபிக் (Salim Shafeek) கூறினார்.



