நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Reha
3 years ago
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நுழைந்து தீவின் குறுக்காக பயணிகின்றது.

இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாகாணங்களில் சில இடங்களில் 75மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவ்வப்போது நாடு முழுவதும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4