யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை ஆலயத்தில் வெகு விமர்சை!

Mayoorikka
3 years ago
யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி  புனித மரியன்னை ஆலயத்தில் வெகு விமர்சை!

யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.

யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை
வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள்
இடம்பெற்றன.

இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.

shel

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4