சுவிஸ்சர்லாந்து Thurgau மாநிலத்தில் கார் விபத்தில் மூவர் காயம்!

Mayoorikka
3 years ago
 சுவிஸ்சர்லாந்து  Thurgau மாநிலத்தில் கார் விபத்தில் மூவர்  காயம்!

சுவிஸ்சர்லாந்து  Weinfelden பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் இருவரே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

மதியம் 1 மணிக்குப் பிறகு, 59 வயதான டிரைவர் ஒருவர் Weinfelden திசையில் Frauenfelderstrasse ல் ஓட்டிக்கொண்டிருந்தார். நகரத்திற்குள் நுழைவதற்கு முன், அவர் இடதுபுறம் Bettelbrünneliweg பகுதிக்கு திரும்ப முற்பட்டபோது எதிரே வந்த 60 வயது முதியவரின் கார் மீது மோதியது.
 
சொத்து சேதம் பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்புபணிகள் இடம்பெற்ற காரணத்தினால் , குறித்த வீதி  சுமார் மூன்று மணி நேரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4