இலங்கையில் தலைமறைவாக உள்ள ஸ்கொட்லாந்து பெண்!

Mayoorikka
3 years ago
இலங்கையில் தலைமறைவாக உள்ள ஸ்கொட்லாந்து பெண்!

இலங்கையில் தான் மேலும் தங்கியிருக்கவேண்டிய நிலையேற்படலாம் என  அரகலய குறித்த பதிவுகளிற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கொட்லாந்தை சேர்ந்த கெய்லே பிரஷர் (Kayleigh Fraser) அச்சம் வெளியிட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

விசா விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து இலங்கையின் குடிவரவுதுறை அதிகாரிகள் கெய்லே பிரேசரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

நீதிபதிகள் அவரின் ஆவணங்களை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கெய்லெ பிரேசர் இலங்கைக்குள் தலைமறைவாக உள்ளார்.

அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் இவரது விவகாரத்தை ஆராயப்போவதில்லை என இலங்கையின் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான இறுதி முயற்சியாக கெய்லே பிரேசர் இலங்கையில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளார்.

எனினும் இராஜதந்திரிகள் கடவுச்சீட்டை கையளிக்குமாறு அழுத்தம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

கெய்லேயின் சட்டசிக்கல் மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கலாம் என்பதால் தான் இலங்கையில் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் வெளியில் தலைகாட்டினால் தான் கைது செய்யப்படலாம் எனது மனித உரிமைகள் முற்றாக புறக்கணிக்கப்படுள்ளது என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

நான் இங்கிருந்து செல்லவேண்டும்,என்னை அவர்கள் விடுகின்றார்கள் இல்லை ,என்னிடம் பணம் இல்லை என்னிடம் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4