கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாட இத்தாலியில் இருந்து பிரித்தானிய வந்த பெண் காதலனுடன் கொலை: 21 வயது இளைஞர் கைது

தனது வருங்கால கணவருடன் உடன் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாட இத்தாலியில் இருந்து பிரித்தானிய வந்த 20 வயது இளம் பெண் தனது காதலனுடன் குடியிருப்பு ஒன்றில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஒரு குடியிருப்பில் பிற்பகல் 2.10 மணியளவில் பிரித்தானியாவில் வசித்து வரும் அன்டோனினோ கலாப்ரோ(26) என்ற இளைஞரும், இத்தாலியை சேர்ந்த ஃபிரான்செஸ்கா டி டியோ(20) என்ற இளம் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நினோ என்று அழைக்கப்படும் அன்டோனினோ கலாப்ரோ மற்றும் ஃபிரான்செஸ்கா டி டியோ இருவருக்கும் நிச்சயதார்த்தம் நிறைவடைந்து இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் குடியிருப்பு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்மஸுக்காக இத்தாலியில் இருந்து ஃபிரான்செஸ்கா டி டியோ என்ற இளம் பெண் பிரித்தானியா வந்தடைந்ததாகவும், இத்தாலிய செய்தித்தாள் லா ஸ்டாம்பாவின் படி, கிறிஸ்துமஸ் விடுமுறையில் தன்னுடன் நேரத்தை செலவிட பிரித்தானியாவுக்கு வருமாறு பிரான்செஸ்காவை நினோ கேட்டுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரை இரட்டை கொலை செய்த குற்றத்திற்காக தோர்னபி ரோட்டை சேர்ந்த கார்டினேல் என்ற 26 வயது இளைஞர் மீது கிளீவ்லேண்ட் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அத்துடன் அவரை டிசம்பர் 26 திகதி திங்கட்கிழமை டீசைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.



