இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Accident #Train
Prasu
3 years ago
இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில் பயணித்த இளைஞனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே விபத்தில் சிக்கியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட நிலையில், புகையிரதத்தில் பயணித்த ஏனையவர்கள் அவரைப் பார்த்து புகையிரதத்தை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4