பிரித்தானிய மருத்துவமனை நோயாளிகளை நெகிழ வைத்த பெங்குவின்கள்
#world_news
#Hospital
#America
Nila
2 years ago

பிரித்தானியாவில் உள்ள Tewkesbury மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகளை 2 பெங்குவின்கள் மகிழ்ச்சிப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விலங்குகளை மருத்துவமனைப் படுக்கைகளுக்கு அழைத்துச் சென்று நோயாளிகளைப் பார்க்கச் செய்வது Tewkesbury மருத்துவமனையின் வழக்கமாகும்.
பிரிங்கல் (Pringle), விட்ஜட் (Widget) எனும் 2 பெங்குவின்கள் தென் அமெரிக்காவின் பெருவைச்(Peru) சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.
பார்ப்பதற்கு அழகாக இருந்தன. வைத்த கண் எடுக்காமல் அவற்றைப் பார்த்தேன். பிரிங்கலையும் (Pringle), விட்ஜட்டையும் (Widget) கண்டதில் மகிழ்ச்சி, என்று மருத்துவமனையில் தங்கியிருந்த நோயாளி ஒருவர் மனநிறைவுடன் கூறினார்.



