8 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

Prathees
1 year ago
8 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதனால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி.ஹப்புகின்ன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய கே. மகேசன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளசெயலாளராகவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய எம்.எம். நயிமுதீன் பதவி உயர்வு அமைச்சின் செயலாளராக,

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக,

ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக,

விவசாய அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!