நீங்கள் நீண்ட நேரம் துாங்கும் இயல்பு கொண்டவரா? அப்படியாயின் இது உங்களுக்கே...

#மக்கள் #துாக்கம் #அதிகம் #நேரம் #வைத்தியர் #Health #people #sleep #Time #doctor
நீங்கள் நீண்ட நேரம் துாங்கும் இயல்பு கொண்டவரா? அப்படியாயின் இது உங்களுக்கே...

நவீன உலகில் மக்களிடையே இந்த துாக்கத்தினால் வரும் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு குறைந்தது 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதேவேளையில் அதிக நேரம் தூங்குவதும் தவறு.

நிறைய பேர் வார இறுதி நாட்களில் வழக்கத்தை விடகூடுதலான நேரம் தூங்குவார்கள். அதே போன்று தினமும் அதிக நேரம் தூங்குவது மருத்துவ ரீதியாக ஆபத்தானது.

தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, ​​அதற்கும் மேலே அதிக மணி துாங்குபவர்களுக்கு பக்க வாதம் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக 25 வயதிற்குட்பட்டவர்கள் இதய செயலிழப்பு, பக்கவாதத்தை எதிர் கொண்டு இறக்கிறார்கள்.

நீண்ட நேரம் தூங்குபவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82 சதவீதம் அதிகம். அதிகப்படியான தூக்கத்திற்கும், பக்கவாதத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை. துாக்கம் அதிகம் கொள்பவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் காணப்படும்.

இது எடை அதிகரிப்பதற்கும், பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்து விடும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் பக்கவாத அபாயத்தை 80 சதவீதம் தவிர்த்துவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.  எனவே உங்கள் துாக்கமும் 6-8 மணியிலிலும் வேறுபடின் தகுந்த வைத்தியரை அணுகுதல் முறையாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4