பிலிப்பைன்சில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
#Indonesia
#வெள்ளம்
#Death
#HeavyRain
Prasu
2 years ago

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 19 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.



