அமெரிக்க பனிப்புயலால் 18 மணி நேரம் காருக்குள் சிக்கிய 22 வயது இளம்பெண் பலி

#United_States #Blizzard #Women #Death
Prasu
1 year ago
அமெரிக்க பனிப்புயலால் 18 மணி நேரம் காருக்குள் சிக்கிய 22 வயது இளம்பெண் பலி

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால், அமெரிக்காவின் பெரும் பகுதி பனியால் சூழ்ந்துள்ளது.

கடும் பனிப்பொழிவு, பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பனிப்புயல் வீசி வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் பப்பலோ நகரில் வீசிய பனிப்புயலால் 18 மணி நேரம் காருக்குள் சிக்கிய 22 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்டெல் டெய்லர் (வயது 22) என்ற இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பணியை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பனிப்புயல் வீசியது. இதனால், அவர் காருக்குள் சிக்கிக்கொண்டார்.

நீண்ட நேரம் வீசிய பனிப்புயலால் கார் பனிக்குள் சிக்கிக்கொண்டது. கடுமையான காற்றுடன் பனிப்புயல் வீசியதால் மணிக்கணக்கில் அவர் காருக்குள் சிக்கிக்கொண்டார்.

பனிப்புயலில் சிக்கிக்கொண்ட அண்டெல் டெய்லர் காருக்குளேயே உயிரிழந்தார். கடும் குளிரால் டெய்லர் உயிரிழந்துள்ளார்.

பனிப்புயலில் சிக்கி 18 மணி நேரத்திற்கு பின் கார் கண்டுபிடிக்கப்பட்டது. டெய்லர் காருக்குள்ளேயே சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!