கனடாவுக்கு செல்ல முயற்சித்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 152 இலங்கையர்கள் நாடு திரும்பினார்!

#SriLanka #Canada #Refugee
Mayoorikka
3 years ago
கனடாவுக்கு செல்ல முயற்சித்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட  152 இலங்கையர்கள் நாடு திரும்பினார்!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் இன்றைய தினம் தத்தமது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக குடிப்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. 

குறித்த இலங்கையர்கள், நவம்பர் 8ஆம் திகதி ஜப்பானிய கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்தனர். அவர்களில் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு மீதமிருந்த 302 பேரில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

இந்தநிலையில் குறித்த 152 பேரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4