ஒரு பில்லியன் குரோணர்கள் வருமானத்தை இழக்கும் நோர்வே அரசு!
#world_news
#Central Bank
#Crime
Mayoorikka
2 years ago

குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்றவர்களிடமிருந்து தண்டமாகவும், பறிமுதல்களாகவும் அறவிடப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு பில்லியன் குரோணர்கள் பணத்தை நோர்வே அரசு இழக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டிலிருந்து அறவிடப்பட்டிருக்க வேண்டிய இத்தொகை, அதிக காலம் கடந்ததால் அறவிடமுடியாத தொகை என்ற வரையறைக்குள் வருவதால் அரசுக்கு இத்தொகை இழப்பாக பதியப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




