ஈரானில் மக்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு நதியில் குதித்து உயிரிழந்த ஈரானியர்

#world_news #Suicide #France #Police #Iran
Nila
1 year ago
ஈரானில் மக்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு நதியில் குதித்து உயிரிழந்த ஈரானியர்

தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஒன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வெளிநாட்டவர் ஒருவர், பிரான்ஸ் நதி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் வாழ்ந்துவந்த முகமது ( 38) என்பவர், Lyon நகர் வழியாகப் பாயும் Rhône நதியில் திங்கட்கிழமை இரவு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.அவர் உயிரிழப்பதற்குமுன், தான் நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஒன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.தகவலறிந்த பொலிஸார் முகமதுவை மீட்க மேற்கொண்டமுயற்சிகள் பலனளிக்காமல் போனதால் அவர் உயிரிழந்தார்.

முகமது, ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். தன் நாட்டில் மக்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையை உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவே தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

செப்டம்பர் மாதம் 16ம் திகதி, முறையான உடை அணியவில்லை என்று கூறி, Mahsa Amini என்னும் 22 வயது இளம்பெண்ணை பொலிசார் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கைது செய்தனர். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.அந்த இளம்பெண்ணை வேனுக்குள் வைத்து பொலிஸார் கடுமையாகத் தாக்கியதாக சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், அதை மறுத்துள்ள பொலிஸார், அந்தப் பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூற, பொலிஸாரின் வன்முறைக்கெதிராக மக்கள் ஈரான் நாட்டின் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.

அதேபோல் Mahsa Amini கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் மக்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காகவே தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறித்தான் முகமதுவும் பிரான்சில் ஆற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!