தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரிப்பால் பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிப்பு

#Pakistan #BombBlast #Soldiers
Prasu
1 year ago
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரிப்பால் பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு பாராளுமுன்றத்துக்கு அருகே நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 

இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. 

இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமாபாத்தில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

அதேபோல் இங்கிலாந்து சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், "இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் வெளியில் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும் என்று குடிமக்களை அந்தந்த நாடுகள் கேட்டுக் கொண்டு உள்ளன. 

இந்தநிலையில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்குமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் போலீஸ் அறிவித்தது. இஸ்லாமாபாத்தில் புதிதாக 25 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

பாகிஸ்தானிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்களது அடையாள ஆவணங்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். 

வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய் யுமாறும், பதிவு செய்யப்படாத உள்ளூர் அல்லது வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துபவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களுக்கு அரசு அலுலகத்தால் வழங்கப்பட்ட நம்பர் பிளேட்டுகள் இருப்பதை உறுதி செய்ய 

அதே போல் ஏதாவது சந்தேகம் அளிக்கும் வகை யில் செயல்கள் நடந்ததால் உடனே உதவி எண்ணில் போன் செய்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!