ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் விடுப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும்- வெளியுறவு மந்திரி செர்ஜி

#Russia #Ukraine #War
Prasu
3 years ago
ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் விடுப்பதை உக்ரைன் நிறுத்த வேண்டும்- வெளியுறவு மந்திரி செர்ஜி

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 10 மாதமாக நீடித்து வரும் நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ரஷியாவிற்கு எந்தவொரு ராணுவ ரீதியான அச்சுறுத்தலையும் உக்ரைன் நிறுத்த வேண்டும். 

அப்படி இல்லை என்றால் இந்த பிரச்சினைக்கு ரஷியா தீர்வு காணும். ரஷியாவை பலவீனப்படுத்த உக்ரைனில் நடக்கும் போருக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4