அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.12.2022

மேஷம்
அசுவினி : மதியம் வரை உங்கள் முயற்சி வெற்றியாகும் அதன் பின் சிறுசிறு தடை தோன்றும்.
பரணி : காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
கார்த்திகை 1 : மதியத்திற்குள் உங்கள் முயற்சி லாபமாகும். பொருளாதார நிலை சீராகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரோகிணி : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணையும் நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை : பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். தொழிலில் திட்டமிட்ட லாபம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரம், கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு மதியத்திற்கு மேல் நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும் நாள்.
பூசம் : மதியம் வரை புதிய முயற்சி எதுவும் வேண்டாம். பணிபுரியும் இடத்தில் நிதானம் தேவை.
ஆயில்யம் : மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடி தோன்றும். அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

சிம்மம்
மகம் : இன்று மதியம் வரை உங்களுடைய எண்ணம் பூர்த்தியாகும். மகிழ்ச்சியான நாள்.
பூரம் : குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
உத்திரம் 1 : வியாபாரத்தில் மதியத்திற்கு மேல் திடீர் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். விழிப்புணர்வு தேவை.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : ஆரோக்யத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும்.
அஸ்தம் : பணிபுரியும் இடத்தில் உண்டான தடை அகலும். வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
சுவாதி : செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். பணியிடத்தில் பொறுப்பு கூடும்.
விசாகம் 1, 2, 3 : உறவினர் உதவியுடன் சொத்துப்பிரச்னையில் வெற்றி பெறுவீர்கள்

விருச்சிகம்
விசாகம் 4 : உழைப்பிற்கு ஏற்ற லாபம் காண்பீர்கள். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும்.
அனுஷம் : உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வரும். உங்கள் பேச்சில் நிதானம் தேவை.
கேட்டை : வேலைத்தேடி வந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு
மூலம் : குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சியில் வெற்றி காணும் நாள்.
பூராடம் : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும் நாள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர்.
திருவோணம் : தடைபட்டிருந்த வருமானம் மீண்டும் வரும். அரிய செயல்கள் எளிதாக நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தினர் விருப்பப்படி புதிய பொன்,பொருள் வாங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். பொறுமை அவசியம்.
சதயம் : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடையும் நாள். செயல்களில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4 : மதியம் வரை புதிய முயற்சி வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும் நாள்.
உத்திரட்டாதி : மதியத்திற்கு மேல் நெருக்கடி குறையும். யாரிடமும் விவாதம் வேண்டாம்.
ரேவதி : மதியத்திற்கு மேல் உங்கள் மனம் மகிழும் படியான செயல் உண்டாகும் நாள்.