பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் பாரிய தீ விபத்து -பொலிஸார் விடுத்த கோரிக்கை

பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீட்டில் தீ மூண்டதற்கு அங்கிருந்த நாயே காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த விபத்து நேர்ந்ததென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமுடியை உலர்த்த உதவும் (hairdryer) கருவியை நாய் தெரியாமல் செயல்படுத்திவிட்டதாகவும் இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உரிமையாளர் வீடு திரும்பியபோது அங்கே புகை சூழ்ந்திருந்தது. வீட்டின் கதவுக்கு முன்னால் நாய் உட்கார்ந்துகொண்டிருந்தது.
நாய் மெத்தை மீது குதித்தபோது அங்கிருந்த கருவி செயல்படத் தொடங்கியது.அதிலிருந்து வெளியான சூடான காற்றால் மெத்தை உறையில் தீ மூண்டு அது மெத்தைக்குப் பரவியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
அந்த தீ வீடு முழுவதும் பரவி பாரிய தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.தீயணைப்பாளர்கள் உடனடியாக வந்து படுக்கை அறையிலும் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பொத மக்கள் வீடுகளில் இவ்வாறான கருவிகளைப் பயன்படுத்திய பிறகு, அவற்றின் மின்சார இணைப்பைத் துண்டித்துவிடும்படி பொலிஸ் அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
செல்லப்பிராணிகள், சிறுவர்களினால் ஏற்படும் தவறுகளினால் ஆபத்தான நிலைமைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



