யாழில் தீவிரமடையும் ஆபத்து -போதை ஊசியால் இளைஞன் மரணம் - மூவரை தேடும் பொலிஸார்

#SriLanka #Jaffna #Police #Death #இளைஞன்
Nila
3 years ago
யாழில்  தீவிரமடையும் ஆபத்து -போதை ஊசியால் இளைஞன் மரணம் - மூவரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை , திடீர் சுகவீனமுற்றுள்ளார் என யாழ்.போதனா வைத்திய சாலையில் , அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.பின்னர் உடற்கூற்று பரிசோதனையில் , இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞனும் , அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடம்பினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர்.நண்பர்கள் மூவரும் , போதைப்பொருளை உட்செலுத்திய பின்னர் , மிகுதியானதை முழுவதுமாக உயிரிழந்த இளைஞன் உட்செலுத்தியுள்ளார்.அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் , மயக்கமுற்று விழுந்த இளைஞன் சுமார் 2 மணி நேரம் ஆகியும் இளைஞன் அசைவற்று காணப்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோப்பாய் பொலிஸார், உயிரிழந்த இளைஞனுடன் , சம்பவ தினத்தன்று போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய ஏனைய மூவரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.இந்நிலையில் தலைமறைவாகியுள்ள மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தலே ,அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் நபர்களை அடையாளம் காணமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை , யாழ்ப்பாணத்தில் போதை ஊசியால் இதுவரை 15 பேர் வரையில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4