ஆபாச படங்களை காட்டி 2 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: 19 வயது இளைஞன் கைது

#SriLanka #Batticaloa #Abuse #Sexual Abuse #Arrest
Mayoorikka
3 years ago
ஆபாச படங்களை காட்டி 2 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: 19 வயது இளைஞன் கைது

மட்டக்களப்பில் 2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தைக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் புதன்கிழமை (28)  உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பித்துள்ளார். அத்துடன், அந்தக் குழந்தை மீது பாலியல் சேஷ்டையையும் விட்டுள்ளார்.

இதனை அவர்களது உறவினரான பெண்ணொருவர் அவதானித்து,  குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில், தனது சகோதரனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4