நாட்டை விட்டு வெளியேறும் திறமையான மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள்!

#SriLanka #doctor
Mayoorikka
3 years ago
நாட்டை  விட்டு வெளியேறும் திறமையான மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள்!

பொருளாதார நெருக்கடி மற்றும் வருமான வரி திருத்தங்களினால் திறமையான மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாடுகளை விட்டு வெளியேறுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. 

இது நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டினார்.

வருமான வரிச் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாட்டை பின்னோக்கி தள்ளுகின்றன. 

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களை நிறுத்துவது குறித்து பலர் பேசுகின்றனர். ஆனால், அத்தகைய முடிவுக்கான காரணத்தை ஆராய யாரும் தயாராக இல்லை  என்றார்.

இதேவேளை, புதிய தனிநபர் வருமான வரியை மீளப்பெறுமாறு கோரி 20,000 இற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் கையொப்பங்களுடன் கூடிய மனுவொன்று விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 

shel

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4