சுவிற்சலாந்து ஊடகவியலாளர் சீனாவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டாரா?
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#சீனா
#ஊடகவியலாளர்
#கைது
#swissnews
#Switzerland
#China
#Police
#Arrest
Mugunthan Mugunthan
2 years ago

சீனாவில் சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் செய்தி சேகரிக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்படவிருந்தார்.
பின்னர் இவர் தான் ஒரு ஊடகவியலாளர் என்று தன் அடையாளத்தை காண்பித்ததும் சீனா பொலிஸார் தன்னை விட்டுவிட்டதாக நேரலையிலேயே தெரிவித்தார்.
இவர் சீனாவில் கொவிட் கட்டு்ப்பாட்டு நிலைக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது சீனப்பொலிசார் மூன்றுபேர் அவரை சூழ்ந்துகொண்டுள்ளனர்.
இதே போன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரைக் கைது செய்த சீனப்பொலிசார், அவரைத் தாக்கி, கைது செய்ததாகவும், பலமணி நேரம் அவரை காவலில் வைத்திருந்தபின் விடுவித்ததாகவும் பிபிசி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



